
இலங்கை முதலீட்டு சபையின் முக்கிய பணிப்பாளர் குழு உறுப்பினர்கள் சிலர் அவர்களது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கை முதலீட்டு சபை அறிக்கை ஒன்றினூடாக இது தொடர்பில் அறிவித்துள்ளது.
உரிய பொறுப்புகளுக்கு உரியவர்கள் நியமிக்கப்படாமையே இதற்கான காரணம் என குறித்த அறிக்கையில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியின் நோக்கிற்கு அமைவாகவே இந்த பதவிகளை ஏற்றதாக முதலீட்டு சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பணிப்பாளர் சபையின் சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.