June 16, 2025 17:26:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை முழுவதும் மின்தடை!

Electricity Power Common Image

இலங்கை முழுவதும்  திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று முற்பகல் 11.35 மணி முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான மின்விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மின்சார பொறியியலாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதால், திருத்தப் பணிகளில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.

இதேவேளை மின்சாரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமையும் இதேபோன்று நாடு முழுவதும் பல பிரதேசங்களில் மின்சார தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.