
சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து, இலங்கை முழுவதும் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மறுஅறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பெலகே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 0115811927 மற்றும் 0115811929 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.