May 13, 2025 16:29:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைப்பு

‘தூய நகரம்’ திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது .

வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு யாழ். மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும், சிறப்பு விருந்தினர்களாக தியாகேந்திரன் அர்ச்சுனா மற்றும் நிலாஜினி தியாகேந்திரனும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆரியகுளத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் நினைவுக்கல் மூன்று மொழிகளிலும் திறந்து வைக்கப்பட்டதுடன், ஆரியகுளம் பெயர் பொறிக்கப்பட்ட எழுத்துரு திறக்கப்பட்டு, ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது.

ஆரியகுளத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை தன் செலவில் முன்னெடுத்த தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் வாமதேவா தியாகேந்திரனுக்கு அறக்கொடை அரசன் எனும் நாமம் சூட்டி மாநகர சபையால் மதிப்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வாண வேடிக்கைகள், தண்ணீர் விசிறல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது. மேலும், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.