January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிவாயு விபத்துகள் குறித்து முறையிட தொலைபேசி இலக்கங்கள்!

எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் தீ விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு தீர்வு அறிக்கையை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எரிவாயு தொடர்பில் விபத்துக்கள் ஏற்பட்டாலோ அல்லது ஏற்படும் சாத்தியம் காணப்பட்டாலோ அருகில் உள்ள சமையல் எரிவாயு முகவர், பொலிஸ் நிலையம் அல்லது இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் விசேட குழுவுக்கு அறிவிக்க முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 0115 811 927 மற்றும் 0115 811 929 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் பேராசிரியர் சாந்த வல்பெலகே தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.