
இலங்கைக்கு சட்டவிரோதமான முறைமைகளின் ஊடாக பணம் அனுப்பும் மற்றும் விநியோகிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறானவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பணிப்புரை விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமது பணத்தை அனுப்புவதற்கு சட்ட ரீதியான வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை, டிசம்பர் மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும், மேலதிகமாக 10 ரூபாய் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.