November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிற்சங்க நடவடிக்கையில் குதிப்பதாக அரச பணியாளர்கள் எச்சரிக்கை

தாம் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கத் தயாராகுவதாக அரச பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரச, மாகாண அரச மற்றும் அரச தொழிற்சங்க சம்மேளனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறுவதற்கு முன்னர் அரச பணியாளர்களுக்கு குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று அரச, மாகாண அரச மற்றும் அரச தொழிற்சங்க சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறான கொடுப்பனவு ஒன்றை வழங்கத் தவறினால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக குறித்த சம்மேளனம் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டம் மூலம் அரச பணியாளர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்று சம்மேளனத்தின் செயலாளர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையால் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று அரச பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.