January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

8 மாதங்களின் பின்னர் அசாத் சாலி விடுதலை

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி 8 மாதங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மதக் குழுக்களுக்கு இடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் அசாத் சாலி கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அசாத் சாலி குற்றமற்றவர் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

அசாத் சாலி மத, இனக் குழுக்களுக்கு இடையே முரண்பாட்டைத் தொற்றுவிக்க முயற்சித்தார் என்பதற்கான ஆதாரங்களை நிரூபிக்கத் தவறியுள்ளதாக மேல் நீதிமன்ற நீதியரசர் அமல் ரனராஜா தெரிவித்துள்ளார்.