November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு!

இலங்கையில் நவம்பர் மாதத்தில் 4,561 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (01) மட்டும் 117 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 20 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தொற்றாளர்கள் எண்ணிக்கை இது எனவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக இடைவிடாது பெய்த மழை டெங்கு நோயாளர்களின் பாரிய அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்தார்.

நாட்டில் டெங்கு தொற்று நிலைமையைக் கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், பாதிப்புகளைத் குறைக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

“காய்ச்சல், தசை வலி போன்ற சில அறிகுறிகள் கொவிட் மற்றும் டெங்கு ஆகிய இரண்டிலும் காணப்படலாம் என்பதில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே, மக்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகள் குறித்து முடிவுக்கு வருவதற்கு முன்னர் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு டாக்டர் செனவிரத்ன அறிவுறுத்தினார்.