இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று மாலை முதல் திடீர் மின்தடை திருத்தப் பணியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவாடு இதனை தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 25 ஆம் திகதி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை மின்சார சபை பொறியியலாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது 8 மணி நேர வேலை நேரத்துக்கு பின்னர் மின்வெட்டுகளை சீர் செய்யும் பணியில் இருந்து விலகுவதாக அவர் கூறினார்.
இதன் காரணமாக நாட்டில் மின் துண்டிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கெரவலபிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.