July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அவசர ஆலோசனைக் குழு கூடி ஆராய்வு!

எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அவசர ஆலோசனைக் குழு கூடி, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, கடந்த தினங்களாக வீடுகளில் பதிவாகி வரும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

எரிவாயு சிலிண்டரில் கலவையின் அளவில் மாற்றம் செய்யப்பட்டமையே இதற்கு காரணம் என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். எனினும் எரிவாயு நிறுவனங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் கூடிய விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, வீடுகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் குறித்து தாம் ஆராய்ந்து வருவதாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

This slideshow requires JavaScript.