
சமையல் எரிவாயுவில் பிரச்சினை இல்லை என்றும் அடுப்பில்தான் பிரச்சினை உள்ளது என்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு இடத்திலும் எரிவாயு சிலிண்டர் வெடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுப்புகளைத் தவிர எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் ஒன்றை நிரூபிக்கும்படி அவர் சவால் விடுத்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர் அல்லது எரிவாயு உள்ளடக்கத்தில் பிரச்சினை இல்லை என்றும் திஸ்ஸ குட்டியாரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
சமையல் அடுப்புகளையும் பரிசோதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.