February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரணில் அரசாங்கத்தில் இணைவதாக வெளியான செய்திக்கு ஐக்கிய தேசியக் கட்சி மறுப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இணைவதாக வெளியான செய்திக்கு ஐக்கிய தேசியக் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

டுபாயில் நடைபெறும் 5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதியுடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதால், அவர் அரசாங்கத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்கத்தில் இணையும் எண்ணம் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ரணில் கட்சியைப் பலப்படுத்தி, இளைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதாக கட்சி தெரிவித்துள்ளது.