முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை இராணுவ தலைமையகம் மறுத்துள்ளது.
குறித்த சம்பவத்தின் உண்மை நிலை திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, கண்டன மற்றும் நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஊடகவியலாளர் இராணுவ வீரர்களுடன் பேசியவாறு பின்னோக்கிச் சென்றவேளை, மோட்டார் சைக்கிளில் மோதி, கம்பி வேலியில் விழுந்ததால் விபத்து ஏற்பட்டதாக இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் குறித்த சம்பவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.