
photo: Twitter/ Rehan Jayawickrema
மாத்தறை, வெலிகம பிரதேச வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீட்டின் அறை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதோடு, அறையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியே உயிரிழந்துள்ளார்.
வேறு ஒரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த பாட்டி மற்றும் 13 வயது சகோதரி ஆகியோர் உயிர் தப்பியுள்ளனர்.
மாத்தறை தீயணைப்புப் பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.