
இலங்கைக்கு தேவையான கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள இதுவரை 45.2 பில்லியன் ரூபா செலவழித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொவிட் வைரஸ் நிலைமைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னணி நாடுகளை விடவும் ஆரோக்கியமான மட்டத்தில் நாம் உள்ளோம் என்றும், மரணங்களை தடுக்கும் நாடுகளின் பட்டியலிலும், தடுப்பூசி ஏற்றும் வேலைதிட்டத்திலும் நாம் முன்னணியில் உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி நாட்டுக்கு தேவையான தடுப்பூசி பெற்றுக்கொள்ள இதுவரை 45.2 பில்லியன் ரூபா (227 மில்லியன் டொலர்கள்) செலவழித்துள்ளோம் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதில் பைசர் தடுப்பூசிக்கான நிதியை உலக வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது. சினோபார்ம் தடுப்பூசிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்குகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.