இலங்கையில் கொவிட் கட்டுப்பாட்டு செயற்பாடுகளுக்காக இதுவரையில் மொத்தமாக 113 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் தடுப்பு செயற்பாடுகளை கட்டுப்படுத்த தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை. அதற்கான பணம் அரசாங்கத்திடம் இல்லையென எதிர்க்கட்சியினர் விமர்சித்துக் கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதி அதனை கணக்கிலெடுக்காது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையை எடுத்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இந்தியாவின் நெருக்கடி மற்றும் ஏனைய சில சிக்கல்கள் காரணமாக எம்மால் அந்த விடயத்தில் தாமதம் ஏற்பட்டாலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை வெற்றிகரகமாக செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அதற்காக ஒரு தரப்பை மாத்திரம் நம்பியிருக்காது அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். கொவிட் வைரஸ் தொற்றை தடுக்கும் வேலைத் திட்டம் மற்றும் அதனுடன் சார்ந்த நடவடிக்கைகளுக்காக 113 பில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.