November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடந்த 14 நாட்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கான அறிவிப்பு!

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ‘ஒமிக்ரோன்’ அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் இலங்கை வந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளர்.

கொவிட் தடுப்பூசிகள் மூலம் உலக அளவில் கொவிட் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய கொவிட் வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒமிக்ரோன் வைரஸ் மாறுபாடு ஏற்கனவே கொவிட் தொற்றுக்குள்ளானோருக்கும் தொற்றக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வைரஸ் மாறுபாடு தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்குள் வரும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.