ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அந்த பதவிக்கு மஞ்சு லலித் வர்ண குமார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றுமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை ஏற்று நவம்பர் 25 ஆம் திகதி தனது பாராளுமன்ற பதவியை மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்திருந்தார்.
முன்னாள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்தார்.
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக 2020 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ரவிநாத் ஆரியசிங்க ஒன்பது மாதங்களுக்கு பின்னர் கடந்த வாரம் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து அந்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.