November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதுவருடன் சந்திப்பு

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா, செயலாளர், பொருளாளர், உப தலைவர் ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவரை சந்தித்துள்ளனர்.

யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளின் பாதிப்பை யாழ். மீனவர்கள் இந்திய தூதுவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

“எங்களுடைய கடற்றொழில் அமைச்சு 500 கோடி ரூபாய்க்கு மேல் இந்திய அரசாங்கத்திடம் நஷ்டஈடு கோரியுள்ளது.

அண்ணளவாக 400 மில்லியன் ரூபாவை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதற்குரிய திட்டம் ஒன்றினை தயாரித்து கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து, கையளித்திருக்கின்றோம்.

அதனை இன்றைய தினம் இந்திய துணை தூதுவரிடமும் கையளித்துள்ளோம்

எமது கோரிக்கையினை தாம் பரிசீலிப்பதாக இந்திய துணை தூதுவர் தெரிவித்தார்.”

என்று மீனவ சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.