மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
புதிய தேசிய சுற்றாடல் மன்றத்தின் 14 ஆவது அமர்வில் உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நகர்ப் புறங்களில் காற்று மாசடைதலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 71 வீதமானவை வாகனங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நகர்ப் புறங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்கக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பனால் காற்று மாசடைவதாகவும், அதன் காரணமாக எரிபொருளில் இயங்கும் வாகனங்களைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.