இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பின்னரான பொருளாதார ஸ்திரத்தன்மை, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக – முதலீட்டு உடன்படிக்கைகள், இரு நாடுகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பாதுகாப்பு கூட்டு நகர்வுகள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களுக்காக பகிரப்பட்ட உறுதிப்பாடு பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.
இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ள அவர், இதனை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.