
நாட்டில் எரிவாயு சிலிண்டர் விபத்துகள் தொடர்பான தகவல்களை மூடி மறைக்க முயற்சிக்கவில்லை என்று நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமையல் எரிவாயுவால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் இன்டெக் நிறுவனத்தின் ஊடாக ஆய்வொன்று நடத்தப்பட்டதாக கூறி, அமைச்சர் அதன் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
குறுகிய காலத்தினுள் பல எரிவாயு விபத்துகள் பதிவாகியுள்ளதை நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் லாப் மற்றும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் மூலம் 233 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிவாயு தொடர்பில் அரச நிறுவனங்கள் பலவற்றுக்கு பொறுப்புகள் இருந்தாலும் நிறுவனங்கள் தமது பொறுப்புகளைச் சரிவர செய்வதில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயுவின் தரத்தில் குறைபாடுகள் இருந்ததாகவும் அதனை தான் தர நிர்ணய நிறுவனத்திற்கு அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.