தென்னாபிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட கொவிட் 19 மாறுபாடான ‘ஒமிக்ரோன்’ ஒருபோதும் நாட்டிற்குள் நுழையாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என இலங்கை மருத்துவ சங்கம் இன்று (29)தெரிவித்துள்ளது.
எனினும் இந்த புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஏற்கனவே எடுத்தது போல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் கலாநிதி பத்மா குணரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மக்கள் சுகாதார விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதோடு, சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவது முக்கியம் என வைத்தியர் குணரத்ன வலியுறுத்தினார்.
இதனிடையே புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் பல இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
“விமான நிலையங்களில் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயல் முறைகள் மிகவும் நலிவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாப் பயணிகள் தொடர்பிலும் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து வழிகளிலும் வைரஸ் பரவல் தடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.