
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு இலங்கையின் மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 17.50 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை கோதுமை மா உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பால் பாணின் விலை நேற்று நள்ளிரவு முதல் 10 ருபாவினால் அதிகரிக்ககப்பட்டுள்ளது.
அத்துடன் ஹோட்டல்களில் கொத்து ரொட்டியின் விலையையும் 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.