இலங்கையில் நிலவும் நிதி நெருக்கடி நிலைமையால் மின் தடை ஏற்படக் கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அந்நியச் செலவாணியின் நிலைமையை அடிப்படையாக வைத்தே வலுச்சக்தி தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்று அந்நியச் செலாவணி குறைந்தால் மின் தடையை சந்திக்க நேரிடும் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சர்வதேச நாணய கையிருப்பு மற்றும் மின் தடை தொடர்பான பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பதைக் கலந்துரையாட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் கையிருப்பில் இருக்கும் அந்நியச் செலாவணியின் நிலைமை, வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்கத்தின் அளவை டொலராக அறிவிக்கும்படியும் ரணில் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச நாணய கையிருப்பு இன்றி எரிபொருள் அல்லது நிலக்கரியைக் கொண்டுவர முடியாது என்றும் அது மின் தடையை நோக்கி நகரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1.5 ட்ரில்லியன் டொலரே இலங்கையின் கையிருப்பில் இருக்கிறது. அதில் 300 மில்லியன் டொலர் தங்கமாகும். எனவே, 1.2 ட்ரில்லியன் அளவே இலங்கையின் கையிருப்பில் உள்ளது.
என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.