January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக் கட்சி விலகுமா?: தயாசிறி பதில்!

அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கிடையே நிலவும் முரண்பாட்டு நிலைமை வெளிப்படையாகியுள்ள நிலையில், அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக் கட்சி விலகலாம் என்று தகவல்கள் வெளியாகும் நிலையிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறியுள்ளார்.

குருநாகலில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த தயாசிறி ஜயசேகரவிடம் ஊடகவியலாளர்கள் இதுகுறித்து கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதன்போது பதிலளித்துள்ள அவர், அரசாங்கம் தொடர்பில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம். விலகுவது தொடர்பாக இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிடடுள்ளார்.