May 25, 2025 12:14:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர் மீது தாக்குதல்: இராணுவச் சிப்பாய்கள் மூவர் கைது!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவச் சிப்பாய்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று, செய்தி சேகரிக்க சென்றிருந்த சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது இராணுவத்தை சேர்ந்தோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஊடக மற்றும் சிவில் அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய்கள் மூவரை இன்று முற்பகல் முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.