May 4, 2025 8:09:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பெருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

கோதுமை மா உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளுக்காக மூலப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தமது சங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றைய உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அது தொடர்பில் விரைவில் அறிவிப்போம் என்றும் ஜயவர்தன கூறியுள்ளார்.