நாட்டில் மின் துண்டிப்புகள் ஏற்படக் கூடும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை மின்சார சபை பொறியியலாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.
இதன் அடுத்த கட்டமாக மின் துண்டிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கெரவலபிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அலுவலக நேரத்தின் பின்னர் மின் தடைகள் ஏற்பட்டால் தாம் சரிசெய்ய மாட்டோம் என்று பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் 48 மணிநேர பணி பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், அது கைவிடப்பட்டிருந்தது.