யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட இருந்த போராட்டம் யாழ். பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மாவீரர்களை நினைவு கூரும் தினத்தில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் தயாராகியுள்ளனர்.
இந்நிலையில், யாழ். நகரில் யாழ். சிவில் சமூக நிலையம் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டம் ஒன்று மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் நடத்த முற்பட்டுள்ளனர்.
போராட்டத்தை முன்னெக்க வந்தவர்கள் தேசிய கொடியை ஏந்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு விரைந்த நிலையில், தற்போதய சூழ்நிலையில் நபர்கள் ஒன்றுகூடி போராட்டங்கள் நடத்த முடியாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட வந்தோரைக் கலைந்து செல்லுமாறும், இல்லாவிடின் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதனால், ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.