January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனுமதிப் பத்திரம் இன்றி வெடிபொருட்களைக் கொண்டுசென்ற ஐவர் கைது!

அனுமதிப் பத்திரம் இன்றி வெடிபொருட்களைக் கொண்டுசென்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

பதவிய ஆரியதாசகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தில் இருந்த 53 கிலோ அமோனியா நைட்ரேட், 2,192 அடி நீளமான நூள், 178 ஜெலட் நைட் கம்பிகள், 320 டெடநேட்டர்கள் உட்பட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.