May 4, 2025 5:42:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று இன்று மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியினால் பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே278 புத்தூர் கிராம அலுவலர் பிரிவில் இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரால் சமூக நலனோம்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.