
கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் பரவும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா, போஸ்ட்வானா, லெசதோ, சிம்பாப்வே, சுவாசிலாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கே இலங்கை இவ்வாறு தடை விதித்துள்ளது.
வெளிநாட்டவர்களைப் போன்றே குறித்த ஆபிரிக்க நாடுகளில் உள்ள இலங்கையர்களும் நாட்டுக்கு வருவது இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளில் இருந்து தற்போது இலங்கைக்கு வந்தவர்களைத் தனிமைப்படுத்தவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.