சேதன உர திட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவசாய அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு உள்ளிட்ட மூன்று இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எத்தனை எதிர்ப்பலைகள் வந்தாலும் ஜனாதிபதியின் உறுதியான கொள்கையில் இருப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் இருந்து ஏற்றுமதி விவசாயத்தைப் பலப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
2500 வருட நீண்ட வரலாற்றை கொண்ட இலங்கையின் விவசாயத்துறைக்கு கொள்கைத் திட்டமொன்று இருக்கவில்லை என்றும் அதனையே தாம் உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சகல விடயங்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைமையை மாற்றி இலங்கைகு என்று ஒரு உற்பத்தியை உருவாக்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சேதன பசளை மூலமாக நாடு நாசமாகியுள்ளது என பாராளுமறத்தில் வாதாடும் ஒரே நாடு இலங்கையாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.