April 27, 2025 12:32:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையுடன் நீண்ட காலம் செயற்பட ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்ப்பு!

இலங்கை தொடர்பான விசேட அவதானத்துடன் நீண்ட காலம் செயற்பட ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்ப்பதாக அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி (Khaled Khiari) தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே கலீட் கியாரி இதனை கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத் தொடருக்கு இணையாக ஜனாதிபதி மற்றும் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் (Antonio Guterres) க்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பின் பிரதிபலனாகவே, கலீட் கியாரி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது அன்டோனியோ குட்ரெஸின் வாழ்த்துகளையும் ஜனாதிபதிக்கு கலீட் தெரிவித்தார்.