தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட கொவிட் 19 வைரஸின் புதிய மாறுபாடு குறித்து இலங்கையின் சுகாதார நிபுணர்கள் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.
புதிய மாறுபாடு நோய் எதிர்ப்பு சக்தியை முற்றாக எதிர்க்ககூடிய திறனை உடையது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த புதிய மாறுபாடு தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இலங்கை உட்பட அனைத்து நாடுகளுக்கும் இது மிகவும் அச்சுறுத்தலாக செய்தி என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கைக்குள் இந்த வைரஸ் திரிபு பரவுவதை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் இது வரை பரவல் அடைந்த அனைத்து வைரஸ்களைவிடவும் மிகவும் மோசமானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தென்னாப்பிரிக்காவின் ஹாங்காங் மற்றும் போட்ஸ்வானாவில் புதிய மாறுபாடு 59 பேரிடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன