May 5, 2025 11:21:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிக்கவெரட்டியவில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம்!

குருநாகல் மாவட்டத்தின் நிக்கவெரட்டிய, கந்தேகெதர பகுதியில் வீடொன்றில் இன்று, வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சமையல் எரிவாயு கசிவு காரணமாகவே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தின் போது வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்ததாகவும், இதனால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த மாதத்திற்குள் மாத்திரம் இலங்கையில் ஐந்து சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை இரண்டு வாரங்களுக்கு முன்னர் பொலனறுவை பகுதியில் இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவமொன்றில் காயமடைந்திருந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.