படகுப் பாதை விபத்து சம்பவத்தை தொடர்ந்து திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் கடற்படையினரால் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அங்கு அமைக்கப்பட்டு வரும் புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரையில் இந்தப் படகு சேவை தொடரும் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் மேற்பார்வையின் கீழ் ஒரே நேரத்தில் 25 பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லக்கூடிய பயணிகள் படகு ஒன்று இயக்கப்பட்டு வருகின்றது.
படகில் பயணிகள் பாதுகாப்பாக ஏறுவதற்கு தற்காலிக இடமொன்றும் கடற்படையால் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு படகுப் பாதை கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.