
File Photo
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த ஹேவா லுனுவிலகே லசந்த, களுத்துறை தியகம பகுதியில் மறைத்து வைத்திருந்த தனது கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டை காண்பிப்பதற்காக அந்தப் பகுதிக்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் குறித்த கைத்துப்பாக்கியை எடுத்து பொலிஸாரை நோக்கி சூடு நடத்தியுள்ளதாகவும், இதன்போது பதிலுக்கு பொலிஸார் மேற்கொண்ட சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவத்தில் இரண்டு பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர், பிரபல குற்றக் கும்பல் உறுப்பினர் சன்ஷைன் சுத்தாவின் கொலையுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.