
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு உபகரணத் தொகுதி பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்காக நன்கொடையாக வழங்கப்பட்டது.
பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணத் தொகுதிகள் கையளிக்கும் நிகழ்வு பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த உபகரணத் தொகுதிகள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டன. வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ட்ரோன் எதிர்ப்பு கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாடல் சாதனங்கள் போன்றவை இத்தொகுதியில் அடங்குகின்றன.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து, விமானப் படையின் பணியாட் தொகுதியின் பிரதானி எயார் வைஸ் மார்ஷல் எம்.டி.ஈ.பி.பாயோ, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரேனுக ரொவல், பிரதிப் பணிப்பாளர் நாயகம் கப்டன் ரி.டி.எஸ்.டி.சில்வா மற்றும் பாராளுமன்ற பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் மஞ்சுள செனரத் ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.