இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச,பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை நாளை சந்தித்து உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான பல துறை விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.