
Sri Lanka Bureau of Foreign Employment official facebook
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிமுகப்படுத்தியுள்ள வசதிகளுடன், வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை தேடும் போது மக்கள் அவதானமாக இருப்பதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களின் உண்மை தன்மையை அறிய பணியகம் இன்னும் பல விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
சுமார் 150,000 பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பணியகத்தில் உள்ளன. அவை பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர்களிடையே முறையாகவும் சமமாகவும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“முகவர் நிலையங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் விவரங்களை உடனடியாக வழங்கும் முறையின் ஊடாக போலி முகவர்கள் மீது உடனடியாக சோதனை நடத்தப்படுகிறது,” என்று மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
எனவே வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை தேடும் போது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு உடனடி தீர்வை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால் ஒரு உதவி மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் பல மோசடிகள் தடுக்கப்பட்டதோடு, மக்கள் தங்கள் விசாரணைகளை 1989 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு 24 மணி நேரமும் மூன்று தேசிய மொழிகளிலும் பதிவு செய்ய முடியும் என்றார்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்தை பார்வையிடுவதன் மூலம் ஹோட்டல் வர்த்தகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மக்கள் தங்களை இலவசமாக பதிவு செய்து கொள்வதோடு, சாத்தியமான வேலை வாய்ப்புகளை தேடலாம் என்று ரந்தெனிய மேலும் கூறினார்.