
(Photo: SL air force)
கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க இலங்கை பொலிஸாருடன் இணைந்து இலங்கை விமானப்படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் பெல் 212 விமானம் மற்றும் ஆளில்லா விமானங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்று நோய் காரணமாக நாட்டின் பயணத் தடை நீக்கப்பட்டதை அடுத்து கொழும்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விடுத்த பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இதன்படி, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் பணிப்புரையின் பேரில், பெல் 212 ரக உலங்குவானூர்தி கொழும்பு பிரதேசம் முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் ட்ரோன்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்திற்கு அருகில், கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.