June 17, 2025 8:50:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எரிவாயு சிலிண்டரின் கலவையில் எவ்வித மாற்றமும் இல்லை’: லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயு சிலிண்டரின் கலவையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயுவில் எவ்வித பாதுகாப்புப் பிரச்சினையும் இல்லை என்று லிட்ரோ நிறுவனத்தின் விற்பனைப் பணிப்பாளர் ஜானக பதிரன தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயுவில் பாதுகாப்புப் பிரச்சினைகள் நிலவுவதாக வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவறான செய்திகளைப் பரப்புவது அரசாங்கம் மற்றும் 6 மில்லியன் பாவனையாளர்களை சங்கடத்துக்கு உட்படுத்தும் என்று லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தாம் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் 150 வருட காலமாக எரிவாயு விநியோகிப்பதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.