January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திடீர் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கிய இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள்

Electricity Power Common Image

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் திடீர் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இன்று நண்பகல் 12 மணி முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

கெரவலபிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் 48 மணிநேர பணி பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், அது கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று அவசர தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.