November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘திஸ்ஸ குட்டியாராச்சியை மனநல பரிசோதனைக்கு உட்படுத்துங்கள்’

ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு ஏதேனும் உளவியல் ரீதியிலான பிரச்சினைகள் இருக்கின்றதா? அவ்வாறு இருப்பினும் மனநல பரிசோதனைக்கு உட்படுத்துமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்றுக்கொண்டுள்ள வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக ஆளுங்கட்சி உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இரண்டாவது நாளாகவும் பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபாநாயகர் தீர்மானத்தை அறிவித்த பின்னர் திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி.மீண்டும் அது தொடர்பில் விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தையே வெளியிட்டார்.ஆகவே இந்தப் பிரச்சினை இன்னமும் முடிவடையவில்லை.நாங்கள் பெண் எம்.பி.க்கள் அமைப்பு என்ற ரீதியில் இது குறித்து எடுக்கப்படும் இறுதித் தீர்மானம் என்னவென கேட்கின்றோம். இது தொடர்பில் அவர் கவலையை வெளியிடுவாரா? அல்லது இது தொடர்பில் சபாநாயகர் தீர்மானத்தை அறிவிப்பாரா? அவ்வாறு இல்லாவிட்டால் அந்த எம்.பி.க்கு ஏதேனும் உளவியல் ரீதியிலான பிரச்சினைகள் இருக்கின்றதா? என்று சுகாதார பரிசோதனைகளுக்காவது உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.