January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நல்லாட்சிக்கு முண்டு கொடுத்த நாம் தேர்தலை நடத்த வலியுறுத்தவில்லை’

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தலை நடத்தவில்லை.நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்த நாமும் அதனை வலியுறுத்தவில்லை என்பதனை பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றோம்.எமது பக்கமுள்ள தவறு என்பதனையும் உங்கள் முன்பாக ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் நாம் செய்த அதே தவறையும் நீங்கள் செய்வதற்கா ஆட்சிக்கு வந்தீர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.

அது எங்கள் பக்கம் உள்ள தவறு என்பதனையும் உங்கள் முன்பாக ஏற்றுக்கொள்கின்றேன்.அந்த அரசாங்கம் விட்ட தவறை நீங்களும் விடப்போகின்றீர்களா? கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்று இரு வருடங்கள் முடிந்து விட்டன.பிரதமரின் காலம் ஒரு வருடம் முடிந்து விட்டது.நாங்கள் விட்ட தவறை நீங்களும் செய்வதென்றால் எங்களைப் போன்று தானே நீங்களும் இருக்கின்றீர்கள். நீங்கள் இந்த மாகாணசபை தேர்தல்களை நடத்தலாமே,அதற்கு ஏன் பின்வாங்குகின்றீர்கள் என்று கேவியெழுப்பினார் சிறீதரன்.