நெருங்கிய துணையின் மூலமான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ‘1938’ என்ற அவசர தொடர்பிலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையுடன் ஐநா சனத்தொகை நிதியம் மற்றும் கனேடிய தூதரகம் இணைந்து நெருக்கமான இணையரின் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கோரிக்கையோடு, 16 நாள் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய துணையின் வன்முறைகள் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பெண்கள் அவர்களுக்கான உதவியை நாட ஊக்குவிக்கும் விதமாகவும், தேசிய பெண்களுக்கான தொலைபேசி உதவி சேவை மற்றும் மிதுரு பியச அவசர தொலைத்தொடர்பு இலக்கம் ஆகியவை தொடர்பான தகவல்களை பகிரும் நோக்கிலும், கொழும்பின் பிரத்தியேக சின்னமாகிய கொழும்பு மாநகரசபை கட்டடம் செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரச் செய்யப்பட்டுள்ளது.