May 5, 2025 11:06:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘படகுப் பாதை விபத்துக்கு கிண்ணியா நகரசபையே பொறுப்புக் கூற வேண்டும்’: நிமல் லான்சா

‘படகுப் பாதை’ விபத்துக்கு கிண்ணியா நகரசபையும் அதன் தவிசாளருமே பொறுப்புக் கூற வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற படகுப் பாதையை நடத்திச் செல்வதற்கு கிண்ணியா நகரசபையே அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவருக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த படகுப் பாதை சேவை பாதுகாப்பற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும், தாம் அவ்வாறு நடத்த வேண்டாம் என வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் கிண்ணியா நகரசபைக்கு அனுமதி மறுத்த நிலையில், அவர்கள் அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.